நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது. உடனே மருத்துவர் உணவுக் கட்டுப்பாடு விதிப்பார். இது இன்று மட்டுமல்ல. வேத காலத்திலேயே இருப்பதை, 'யோ புங்தே அஹமேவ பங்தே' என்னும் ஸ்லோகம் சொல்கிறது.
இதற்கு 'யார் என்னை(உணவை) அதிகம் சாப்பிடுகிறானோ, அவனை நான்(உணவு) சாப்பிடுகிறேன்' என்பது பொருள். எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பிடும் முன் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகம் சொன்னால் அது பிரசாதமாக
மாறும். அந்த உணவைச் சாப்பிட நோயின்றி வாழலாம்.