சிதம்பரம் நடராஜரின் பக்தரான வியாக்ரபாதர் தினமும் பிரம்மமுகூர்த்தத்தில் (அதிகாலை 4:30 - 6:00 மணி) பூப்பறிக்கச் செல்வார். வெளிச்சம் தெரியாததால் அழுகிய பூக்களையும் தெரியாமல் பறித்து விடுவார். சுவாமிக்கு சூட்டிய பிறகே பழுதடைந்த பூக்கள் என்பது தெரிய வரும்.
இந்நிலையில் மரத்தில் ஏறுவதற்கு உதவியாக புலிக்காலும், அந்தக் காலிலேயே ஒரு கண்ணும் இருக்க வேண்டுமெனக் கேட்டு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு இருந்தால் மரத்தில் பற்றி ஏறி நல்ல பூக்களைத் தேர்ந்தெடுத்து பறிக்கலாம் என்பது அவரின் எண்ணம்.
நடராஜரும் முனிவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். இதன் மூலம் தினமும் காலையில் சுவாமிக்கு பூக்களை அணிவிப்பது சிறப்பு என்பது தெரிகிறது.
குடும்பசூழல், பணி காரணமாக மாலையில் விளக்கேற்றுபவர்கள் மாலையில் அணிவிக்கலாம். எப்போது சூடினாலும் மறுநாள் காலையில் களைந்து விட வேண்டும். காலையிலும், மாலையிலும் பூக்கள் அணிவிப்பது மிகவும் சிறப்பு.