
தை அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். இது குறித்து காஞ்சி மஹாபெரியவர் என்ன சொல்கிறார் தெரியுமா...
ஒரு ஜீவன் (உயிர்) வாழும் போதும், இறக்கும் போதும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. ஒருவர் இறந்த பிறகு திவசம், திதி எல்லாம் எதற்கு என கேட்கக் கூடாது. பரோபகாரத்தைச் சேர்ந்தவை பித்ரு காரியங்கள். எப்படிப்பட்ட பிறவியை முன்னோர் எடுத்திருந்தாலும், அவர்களுக்கு இங்கே செய்யும் தர்ப்பணம் திருப்தியை உண்டாக்கும்.
ஒருவர் இறந்தவுடனேயே பித்ருலோகம் செல்வதில்லை. இன்னொரு பிறவியும் எடுப்பதில்லை. இறந்தவரின் உயிர் ஒரு வருடம் பயணம் செய்து பித்ருலோகத்தை அடையும். அப்போது அந்த உயிர் வைதரணியைக் (எமலோகம் செல்லும் வழியிலுள்ள ஆறு) கடந்தாக வேண்டும். உயிர் பரலோகம் செல்ல ஒரு வருடம் ஆகும்.
இக்காலத்தில் அதன் திருப்திக்காக அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இயலாதவர்கள் தை, ஆடி, மகாளய அமாவாசையில் கொடுக்க வேண்டும். இவையே முன்னோருக்கு செய்யும் உயர்ந்த சேவை.