sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

எதிரிபயம் போக்குபவர்

/

எதிரிபயம் போக்குபவர்

எதிரிபயம் போக்குபவர்

எதிரிபயம் போக்குபவர்


ADDED : ஜன 23, 2025 11:20 AM

Google News

ADDED : ஜன 23, 2025 11:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரியே இல்லை என்பார்கள் சிலர். ஆனால் அவர்களின் காலைச் சுற்றிய பாம்பாக எதிரிகள் உடனிருந்து அவர்களையே கொல்வார்கள். இன்னும் சிலர் பேசும் போது எதிரில் இருப்பவர்களைப் பேசக்கூட அனுமதிக்க மாட்டார்கள். உண்மையிலேயே எதிரி யார் என்பதே தெரியாமல் இவர்கள் அறியாமையில் வாழ்கிறார்கள்.

மனதில் தோன்றும் விருப்பு, வெறுப்பு, ஆணவம், பொறாமை, ஆசை எண்ணங்களே உண்மையான எதிரிகள். இவர்களை வெற்றி பெற்றால் மட்டுமே கடவுளை தரிசிக்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கும்.

இந்நிலையை அடைய மகான் ராமானுஜரை மனதில் எப்போதும் சிந்தியுங்கள். உங்களுக்கு எதிரியே இருக்க மாட்டார்கள் என சத்தியம் செய்கிறார் கருடாழ்வாரின் அம்சமான எம்பார் சுவாமிகள். இவர் பாடிய இந்த பாடலை தினமும் விளக்கேற்றி பாடினால் உங்களுக்கு மட்டுமல்ல... உங்களின் வம்சத்திற்கே எதிரி இருக்க மாட்டார்கள்.

பற்பமெனத் திகழ் பைங்கழல்

உந்தன் பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராட

பதிந்த மருங்கழகும்

முப்புரி நுாலொடு முன்கையில்

ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள்

நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

எப்போதும் கற்பகமே விழி கருணை

பொருந்திடு(ம்) கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும்

கணணச் சிகைமுடியும்

எப்பொழுதும் எதிராசர் வடிவழகு

என் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர் இல்லை

எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.






      Dinamalar
      Follow us