
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வள்ளலாரை புகைப்படம் எடுக்க விரும்புவதாக சில பக்தர்கள் தெரிவித்தனர். அவரும் அனுமதித்தார். ஆனால் புகைப்படத்தில் உருவம் தெளிவாக பதிவாகவில்லை.
அதன்பின் மண்பாண்டத் தொழிலாளி ஒருவரிடம் அவரின் உருவத்தை மண்சிலையாக வடிக்கச் சொன்னார்கள். அதைப் பார்த்த வள்ளலார், 'பொன்மேனி (உடம்பு) இப்படி மண்ணாகி விட்டதே' என கீழே போட்டு உடைத்தார். அவர்களிடம், 'உயிர்களை நேசியுங்கள்; தெய்வம் குடியிருக்கும் கோயிலாக உங்களின் மனம் திகழும்' என வாழ்த்தினார்.