நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூன்று வடிவங்களில் சிவனை தரிசிக்கலாம்.
1. அருவுருவத் திருமேனி அதாவது சிவலிங்க வடிவம்
2. அருவத் திருமேனியாக (உருவம் இல்லாதவர்) சிதம்பரம், ஆவுடையார் கோவில்(திருப்பெருந்துறை) கோயில்களில் உருவமில்லாமல் இருக்கிறார்.
3. உருவத் திருமேனியை சிவமூர்த்தங்கள் என்பர். இவற்றில் ஐந்து வடிவங்கள் சிறப்பானவை. இவர்களை வழிபட நன்மை உண்டாகும்.
தட்சிணாமூர்த்தி - அமைதி, ஞானம்
பிட்சாடனர் - வசீகரம், புத்துணர்வு
பைரவர் - துணிச்சல், எதிரிபயம் தீரும்
நடராஜர் - மகிழ்ச்சி, உற்சாகம்
சோமாஸ்கந்தர் - நிம்மதி, மகிழ்ச்சி