நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் நாள் இரவில் மீதமான சோற்றை தண்ணீரில் இட்டு வைப்பர். மறுநாள் காலையில் 'நீராகாரம்' என்னும் அந்த நீரைக் குடித்து விட்டு சோற்றை உண்பர். கோடை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரவல்லது இது.
இந்த பழைய சோறும், பகவானும் ஒன்று தெரியுமா? பழையது தண்ணீருக்குள் கிடக்கிறது. பெருமாளும் கடலுக்குள் பள்ளி கொண்டிருக்கிறார். காலையில் எழுந்து பழைய சோற்றை சாப்பிடுவது போல பெருமாளையும் காலையில் எழுந்ததும் வழிபட வேண்டும். பழைய சோற்றை போல பெருமாளைச் சுற்றி நாரம் (நீர்) சூழ்ந்துள்ளதால் 'நாராயணன்' எனப்படுகிறார்.