ADDED : மார் 20, 2025 02:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் வாக்கு. செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, பிரதோஷம், கார்த்திகை நாட்களில் கோயிலுக்குச் செல்வது நன்மை அளிக்கும். ஆண்டுக்கு ஒருமுறையாவது நாயன்மார்கள் பாடிய தேவாரத் தலங்கள், ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களுக்கும் சுற்றுலா செல்வது அவசியம்.
அப்போது கோயில்களில் செய்ய வேண்டிய பிரார்த்தனை ஒன்று இருக்கிறது. யாத்திரை செல்பவர்கள் 'புனர்தரிசனம்' கிடைக்க வேண்டும் என வேண்டுவது அவசியம். 'புனர்' என்பதற்கு 'மீண்டும்' என பொருள். அதாவது, மீண்டும் இங்கு வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். இதனடிப்படையில் 'புனர்தரிசனம் பிராப்தி ரஸ்து' என பெரியவர்கள் வாழ்த்துவர்.