
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தானத்தில் சிறந்தது அன்னதானம். இதில் மட்டுமே ஒருவரை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.
பணம், உடை, நகை என எவ்வளவு பொருட்களை கொடுத்தாலும் மனிதன் மறுக்க மாட்டான். போதும்... வேண்டாம் என சொல்ல மாட்டான். சாப்பிடும்
போது தான் வயிறு நிறைந்ததும் போதும் என மறுப்பான். உயிரையும், உடம்பையும் சேர்த்து காப்பது அன்னம் தான்.
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்கிறது மணிமேகலை காப்பியம். காஞ்சிபுரத்தில் கிடைத்த அட்சயபாத்திரம் மூலம் மக்களின் பசிப்பிணியைப் போக்கினாள்.
மணிமேகலை. புராண காலத்தில் அம்பிகை அன்னபூரணியாக வந்து அன்னதானம் செய்ததை 'இரு நாழி நெல் கொண்டு எண்நான்கு அறம் இயற்றினாள்' என்கிறது காஞ்சி தலபுராணம். எனவே அன்னதானம் செய்து அன்னபூரணி அருள் பெறுவோம்.