sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

எங்கள் தலைவன்

/

எங்கள் தலைவன்

எங்கள் தலைவன்

எங்கள் தலைவன்


ADDED : மே 23, 2025 09:20 AM

Google News

ADDED : மே 23, 2025 09:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்னிடைச் செந்துவர் வாய் கருங்கண்

வெண்ணகை பண்ணமர் மென்மொழியீர்!

என்னுடை ஆரமுது எங்கள் அப்பன்

எம்பெருமான் இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்

தமையன் எம் ஐயன் தாள்கள் பாடிப்

பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்!

பொன் திருச் சுண்ணம் இடித்து நாமே!

மின்னலைப் போன்ற இடையும், செம்பவளம் போல் சிவந்த இதழும், கரிய அழகான கண்களும் கொண்ட பெண்களே... வெண்ணிற பற்கள் தெரிய புன்னகை சிந்துபவர்களே. இசை போல இனிமையாக பேசுபவர்களே. பொன் ஆபரணங்கள் அணிந்தவர்களே.

அமிர்தம் போல இனிக்கும் சிவபெருமானே எங்களுக்கு தந்தையும், தலைவனுமாக இருக்கிறான். மலையரசன் மகளான பார்வதிக்கு கணவனான அவன், எங்களின் மகனாகவும், தந்தையாகவும், சகோதரனாகவும் இருக்கிறான். அப்பெருமானின் திருவடிகளைப் பாடியபடி அவனது அபிஷேகத்திற்குரிய வாசனைப்பொடியை இடிப்போம் வாருங்கள் என அழைக்கிறார் மாணிக்கவாசகர்.






      Dinamalar
      Follow us