ADDED : ஜூன் 12, 2025 11:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க நடுவில் குழந்தை முருகன் இருக்கும் கோலத்தை 'சோமாஸ்கந்த மூர்த்தம்' என சொல்வர். இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம் இது.
பெற்றோரின் கவனம் குழந்தைகளின் மீதிருந்தால் தான் பேர் சொல்லும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து பெருமை சேர்ப்பர் என இதன் மூலம் உணர்த்துகின்றனர். திருவிழாக்களில் சோமாஸ்கந்த மூர்த்தியே பெரும்பாலும் வீதிகளில் எழுந்தருள்வர்.
திருவாரூர் தியாகராஜர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயில்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தங்கள் சிறப்பானவை.