நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி வெள்ளியன்று கோலமிட்டு விளக்கேற்றி நைவேத்யமாக அம்மனுக்கு பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைக்கும். அன்று பெண் குழந்தைகளை அம்மனாக கருதி ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் கொடுத்து சிறப்பிக்க வேண்டும். மாலையில் கோயில்களில் 108, 1008 விளக்குகள் வைத்து விளக்கு பூஜை செய்வார்கள். அம்மன் கோயில்களில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகையான மலர்களால் நவசக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை.