ADDED : ஜூலை 15, 2025 01:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளியும் மாரியும் வேறு வேறு தெய்வங்கள் அல்ல. இருவரும் ஒருவரே. பழங்காலத்தில் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். உழவுத்தொழில் செழிக்க மழை அவசியம். அதனால் மழை வேண்டி பொங்கலிட்டு வழிபட்டனர்.
மழை பெருகி விவசாயம் செழித்தது. மழைக்கான அறிகுறியாக வானத்தில் கருமேகம் கூடி நிற்பதை காளி என்றும், முத்து முத்தாய் மழைநீர் மண்ணில் விழுவதை மாரி என்றும் கூறினர். இயற்கையை இரு பெண் தெய்வங்களாகக் கருதினர். கருமேகத்தை 'அக்கா காளி' என்றும் அதை தொடர்ந்து வரும் மழையை 'தங்கை மாரி' என்றும் போற்றினர்.