ADDED : ஜூலை 25, 2025 07:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதியின் எதிரில் கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சியளிக்கிறார். எட்டு நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள இவர், சிறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.
வியாழன்தோறும் கொழுக்கட்டை நைவேத்யம் செய்கின்றனர். சுக்ரீவனும், அங்கதனும் துவார பாலகர்களாக இவருக்கு காவல் புரிகின்றனர். இங்கு மார்கழி திருவாதிரையன்று திருநட்சத்திரம் கொண்டாடப்படுகிறது.