
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவில் கொண்டாடப்படும் விழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்க வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. யாகம் நடத்திய பலிச்சக்கரவர்த்தியிடம் சென்ற வாமனர், மூன்றடி மண்ணை தானமாக கேட்க அவரும் சம்மதித்தார். முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து பாதாள உலகத்திற்கு அனுப்பினார். அப்போது மகாபலி தன் நாட்டு மக்களைக் காண ஆண்டு தோறும் வருவதற்கு அனுமதி கேட்டார். அதை வாமனரும் ஏற்றார். இதன் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலியை வரவேற்கும் நாளாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.