
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படிப்புக்கு தெய்வம் சரஸ்வதி. இவளுக்கும் குருநாதர் இருக்கிறார். அவரே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவர். இவரை வழிபட்டால் படிப்பில் நம்பர் 1 ஆக திகழலாம்.
வேதங்களின் துணையுடன் பிரம்மா படைப்புத் தொழிலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த வேதங்களை குதிரை வடிவில் உருமாற்றி மது, கைடபர் என்னும் அசுரர்கள் பறித்துச் சென்றனர்.
இதனால் உலகம் இருண்டது. பிரம்மா உடனே மகாவிஷ்ணுவிடம் சொல்ல அவர் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராக அவதரித்து, அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார். ஹயக்ரீவ பக்தரான வாதிராஜர் இயற்றிய ஸ்லோகத்தை தினமும் ஜபித்தால் படிப்பில் நம்பர் 1 ஆகத் திகழ்வீர்கள்.
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே.