
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயதசமி என்றால் வெற்றியை தரும் நாள். இந்நாளில்தான் சும்பன், நிசும்பன், ரத்தபீஜன், மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை பராசக்தி அழித்தாள். நம் மனதின் உள்ளேயும், வெளியேயும் நன்மை, தீமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டே இருக்கும்.
கல்வி, வீரம், செல்வத்தின் மூலம் நம் வாழ்க்கையையும், நல்ல எண்ணத்தின் மூலம் மனதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே விஜயதசமியின் நோக்கம். இந்த நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். உதாரணமாக தொழில் தொடங்குவது, பள்ளியில் சேர்ப்பது, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்குவது நல்லது.