நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவள் என்பதால் 'கலைமகள்' என சரஸ்வதியை அழைப்பர்.
'கலை' என்றால் 'வளர்வது'. அதுபோல கல்வியும் வளர்ந்து கொண்டே செல்லும். அதற்கு கரை என்பதே இல்லை. மனிதன் தன் வாழ்நாளுக்குள் எல்லா கலைகளையும் கற்று விட முடியாது. இதையே 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்பர். சரஸ்வதியின் தலையிலும் சிவனைப் போல மூன்றாம் பிறை இருக்கும். இதற்கு காரணம் மூன்றாம் பிறையைப் போல சிறிதளவு கலைகளையே தான் அறிந்திருப்பதாகவும் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது என அடக்கமுடன் இருக்கிறாள்.
அறிஞராக இருந்தாலும் மனிதனுக்கு பணிவு அவசியம் என ரகசியத்தை இதன் மூலம் நமக்கு உணர்த்துகிறாள்.