
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதரை 'பெரிய பெருமாள்' என அழைப்பர். இதைப் போல 'பெரிய பெரிய பெருமாள்' யார் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
திருப்பதி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணத்தில் மலை போல சாப்பாடு தயாராக இருந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகரிஷிகள் திருமண விருந்தை சாப்பிடக் காத்திருந்தனர். படைப்புக்கடவுளான பிரம்மா மணக்கோலத்தில் நின்ற சீனிவாசரிடம், ''இந்த உணவுகளை யாருக்கு நைவேத்யம் செய்வது எனத் தெரியவில்லையே'' எனக் கேட்டார்.
''அகோபிலத்தில் அருள்புரியும் நரசிம்மருக்கு படைத்த பின்பு விருந்தினருக்கு பரிமாறுங்கள்'' என்றார். பத்மாவதியுடன் சீனிவாசப் பெருமாளும் அகோபிலம் சென்று நரசிம்மரை வழிபடவும் செய்தார். இதனால் நரசிம்மருக்கு 'பெரிய பெரிய பெருமாள்' என பெயர் ஏற்பட்டது.