நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனுக்கு உகந்த விரதமாக இருப்பது கந்தசஷ்டி விரதம். மற்றவிரதங்களை போல் அல்லாமல் இவ்விரதத்தை 6 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ஐப்பசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் விரதத்தை நிறைவு செய்யலாம். முடியாதவர்கள் சஷ்டி தினத்தில் மட்டுமாவது இருக்கலாம்.
இந்த 6 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உண்டு. முருகனின் முகங்கள், படை வீடுகள், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள், 'சரவணபவ' என்ற மந்திரம் என எல்லாமே ஆறு. ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது விரோதம், கடன், நோயைக் குறிக்கும். அனைத்தையும் சரிசெய்யும் வல்லமை கொண்டவர் முருகன். எனவே சஷ்டி விரதம் இருந்து, கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து அவரது அருளைப் பெறுவோம்.