நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லவர்களை பாதுகாக்கவும், அசுரர்களை அழிக்கவும் யுகங்கள் தோறும் கடவுள் அவதாரம் செய்கிறார். தர்மம் நிலைக்க சிவபெருமானின் அம்சமான முருகப்பெருமான் அவதாரம் செய்து இந்த உலக உயிர்கள் காத்தார் என்கிறார் கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார்.
அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப்
பலவாய் ஒன்றாய்
பிரம்மாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர்
மேனியாகிக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள்
பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்
உலகம் உய்ய