ADDED : நவ 24, 2023 03:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக விளங்கட்டும் என்பது பார்வதியின் திருவாக்கு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருப்பது குன்றக்குடி.
முன்பு பிரம்மா, விஷ்ணுவின் வாகனமாகிய அன்னம், கருடனிடம் கர்வம் கொண்ட மயில் முருகனின் ஆணைப்படி இங்கு மலையாக உள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியராக தனித்தனி மயில் மீது முருகப்பெருமான் வீற்றிருந்து அருள்கிறார். இங்கு நவக்கிரகங்கள் மூன்று மூன்றாக ஒரே திசையை நோக்கி காணப்படுவது அபூர்வம். இங்கு ஆயுள் பலம் அதிகரிக்கவும், தோல்நோய் நீங்கவும் கார்த்திகை தோறும் சுவாமியை வழிபடுவது சிறப்பு.
அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், கல்லல் குக மணிவாசகரால் பாடப்பெற்ற தலமிது.