தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கைமேல் பலன் உண்டு

கைமேல் பலன் உண்டு

கைமேல் பலன் உண்டு


ADDED : ஜன 12, 2024 04:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 04:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புராணங்களில் பலரும் சூரிய பகவானை வழிபட்டு கைமேல் பலனைப் பெற்றுள்ளனர்.

* பிரம்மாவின் புத்திரரான நாரதர் இவரை வழிபட்டு வரம் பெற்றர் என ஸ்காந்த புராணம் சொல்கிறது.

* பவிஷ்ய, சவுர புராணங்கள் இவரையே உலகின் அதிபதி என்று வர்ணிக்கிறது.

* மகாபாரதத்தில் வரும் தர்மர் இவரை வழிபட்டு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தைப் பெற்றார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனின்

108 பெயர்களைச் சொல்லி வணங்கினார்.

* ராவணனை அழிக்க முடியாமல் ஒருகட்டத்தில் சோர்வடைந்தார் ஸ்ரீராமபிரான். அப்போது அங்கு வந்த அகத்திய முனிவர் அவருக்கு 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதை மூன்று முறை கூறி ஆத்மபலத்தை பெற்ற ஸ்ரீராமபிரான், புதுத்தெம்புடன் போரில் பங்கேற்று ராவணனை அழித்தார்.

* துவாரகையைச் சேர்ந்த மன்னன் இவரை வழிபட்டு தினமும் தங்கம் வழங்கும் சியாமந்தகமணி என்னும் உயர்ந்த ஆபரணத்தை பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us