ADDED : ஜன 26, 2024 07:31 AM
ஒரு மனிதனின் வாழ்க்கையை குழந்தை, இளமை, முதுமை என மூன்று காலங்களாக பிரிக்கலாம். இதில் குழந்தைப்பருவத்தில் பெற்றோர், உறவினர், நண்பர்கள், படிப்பு என காலம் சென்றுவிடும். பின் இளமைப்பருவம் என்பது வேலை, கல்யாணத்தை ஒட்டியே நகரும். அதிலும் கல்யாணம் என்பது புதியதோர் வாழ்க்கைக்குள் செல்லும் நிகழ்வாகும்.
சிலருக்கு இந்த வாழ்க்கைக்குள் பயணிக்க பல தடைகள் ஏற்படும். இந்த தடைகளை தகர்க்க அரியலுார் மாவட்டம் திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு வாருங்கள்.
தஞ்சாவூரில் இருந்து 28 கி.மீ.,, அரியலுாரில் இருந்து 30 கி.மீ.,ல் உள்ளது.
இத்தலம் தேவாரப்பாடல் பெற்றது.
இங்குள்ள நந்தி கல்யாணத்தை பார்த்தால் கல்யாணம் முந்தி நடக்கும். ஆம். இங்குள்ள நந்திகேஸ்வரருக்கும், சுயசாம்பிகை அம்பாளுக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று கல்யாணம் நடக்கிறது. இந்நிகழ்வை கண்குளிர தரிசித்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு விரைவில் கல்யாணம் நிச்சயமாகிவிடும்.