ADDED : பிப் 23, 2024 11:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடகு மலையில் தோன்றி தமிழகத்தை வளப்படுத்தும் ஆறு காவிரி. வான் பொய்ப்பினும் தான் பொய்க்காமல் ஓடும். பூக்களைப் போர்வையாகக் கொண்டு இரண்டு கரைகளிலும் அலைகளாகிய கைகளால் பொன்னையும், மணியையும் கொழிக்கச் செய்யும். காவிரி வளத்தால் சிறப்புற்று விளங்கும் தெய்வத் திருக்குடந்தை எனப் புலவர்கள் பாராட்டும் தலம் கும்பகோணம். மகிமை மிக்க இத்தலத்தை தரிசித்தால் முன்வினை பாவம் தீரும். வேண்டியது கிடைக்கும்.