நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்க்கண்டேயருக்காக சிவன் மழு என்ற ஆயுதம் (கோடரி) ஏந்தி ஆடிய தலம் மழுவாடி. தற்போது 'மழபாடி' எனப்படுகிறது.
நந்திதேவர், சுயசாம்பிகையின் திருமணம் இங்கு நடந்தது.
சிவனடியாரான சுந்தரரின் கனவில் தோன்றிய சிவன், “மழுவாடிக்கு வர மறந்தனையோ?” எனக் கேட்டு இத்தலத்திற்கு வரவழைத்தார். 'பொன்னார் மேனியனே' எனத் தொடங்கும் புகழ் மிக்க பதிகத்தை சுந்தரர் இங்கு பாடினார். “என் தாயானவனே! திருமழபாடியில்
அருள் புரியும் மாணிக்கமே! உன்னை விட்டால் வேறு யாரை நினைப்பேன்''என்னும் பொருளில் பாடல் பாடினார்.