ADDED : மார் 15, 2024 11:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எந்த செயலையும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே தொடங்குகிறோம். பெற்றோரைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியே குலதெய்வம். பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் போது சிலர் இந்த வழிபாட்டை விட்டு விடுகின்றனர். இதனால் குலதெய்வமே தெரியாத நிலை உண்டாகிறது. குடும்பத்தில் சோதனை, துன்பம் ஏற்படும் போது தெய்வ குற்றம் என பயமும் ஏற்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் கும்பகோணம் அருகே குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., சென்று கதிராமங்கலம் உள்ளது. அங்கு அகத்தியர் பூஜித்த வனதுர்கையை தரிசிக்கலாம்.
'கதிர் வேய்ந்த மங்கலம்' என கம்பர் இதைக் குறிப்பிடுகிறார். பெயருக்கேற்ப கதிரவனின் கதிர்கள் அம்மன் மீது படுவதால் 'ஆகாச துர்கை' எனப்படுகிறாள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வழிபடுவது விசேஷம்.