தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/செவ்வாய் தோஷம் விலக...

செவ்வாய் தோஷம் விலக...

செவ்வாய் தோஷம் விலக...


ADDED : மே 10, 2024 12:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 12:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னியம் பிகைசேய் போற்றி

கலைமதிப் புலவா போற்றி

பொன்னியந் துறையாய் போற்றி

பூந்துறை நாடா போற்றி

இன்னிலம் இயம்ப வானோர்

இறைஞ்ச நான்மறை நின்றேத்தச்

சென்னியங் கிரியில் வாழும் தேவனே போற்றி போற்றி

ஆவலங் கொழிந்தார் போற்றி

அடிதொழும் அடிகேள் போற்றி

பூவலங் கொண்டாய் போற்றி

புலாதிகட் கணுாகாய் போற்றி

கேவலங் கடந்தாய் போற்றி

கிளரொளிப் பொருளே போற்றி

சேவலங் கொடியாய் போற்றி

சிரகிரி வாழ்வே போற்றி

மோகற மொழிந்தாய் போற்றி

முராரி மாமருகா போற்றி

யாகர மறையாய் போற்றி

யாறுமுக விறைவா போற்றி

மாகர வயிலாய் போற்றி

மரகத மயிலாய் போற்றி

சேகர கிரியாய் போற்றி

சிரகிரி வாழ்வே போற்றி

தென் செய்தே னிமிர்கூ தாளஞ்

செச்சை பூங் குரவ நீப

மின்செய்பூ ணிமைக்குந் திண்டோள்

மிலைந்த பொன் மாலை யோடு

மின் சொலும் பொருளு மின்றி

வெளிறியீர்ஞ் சுவைய திர்ந்த

புன்சொலாற் றமியேன் சாற்றும்

தொடையலும் புனைவாய் போற்றி

கொங்கு நாடு எனப் போற்றப்படும் கோயம்புத்துாரில் உள்ள மலைக்கோயில் சென்னிமலை. புஷ்பகிரி, மகுடகிரி, சிரகிரி என்றும் இதற்கு பெயர்கள் உண்டு. இங்குள்ள முருகன் தன்னை தானே பூஜித்த பெருமை கொண்டவர். இங்குள்ள மாமாங்கத் தீர்த்தம்

12 ஆண்டுக்கு ஒரு முறை பொங்கும் சிறப்புடையது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது. கந்த சஷ்டிக் கவசத்தை தேவராய சுவாமிகள் அரங்கேற்றியது இங்கு தான். 1984ல் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டிய காளைகள் மலையேறிய அதிசயம் இங்கு நடந்தது.

இத்தலத்தின் புகழ் பாடும் நுால்களில் சென்னிமலை தலபுராணம் சிறப்பானது. இதை இயற்றியவர் சரவண மாமுனிவர். செவ்வாய் தோஷம் போக்கும் சென்னிமலை முருகனை வழிபடுவோருக்கு வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us