
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னும் மணியும் புவிஆள் செங்கோலும் மென்பூந்துகிலும்
மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும்
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும்
நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே.
செந்தாமரை மலரில் வசிக்கும் திருமகளே! உம் கடைக்கண் பார்வையால் பொன்னும், நவமணிகளும் வந்து சேரும். அரசாளும் பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணரங்களை சூடி மகிழலாம். வியக்கும் அழகும், வலிமை மிக்க வீரமும், வெற்றி வாகை சூடும் இன்ப வாழ்வும் அமையும்.
இந்த பாடலை பாட பணம் சேரும்.