
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராவணனை போரில் ராமர் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க வந்தார் அனுமன். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அவருக்கு பேச்சு வரவில்லை. இருந்தாலும் சீதாதேவியை வணங்கி, 'அம்மா' என இழுத்தார். அப்போது அவரது நாக்கு தழுதழுத்தது. உடனே தான் சொல்ல வந்ததை மணலில் எழுத ஆரம்பித்தார். அது என்ன தெரியுமா... 'ஸ்ரீராமஜெயம்'.
ஆம். அந்தக் குறிப்பை படித்தவுடனே ராமர் வெற்றி பெற்றதை தெரிந்து கொண்டாள் சீதை. அன்று முதல் 'லிகித நாமஜெபம்' என்ற பெயரில்
ராம நாமத்தை பனை ஒலைகளில் எழுதும் வழக்கம் உண்டானது. இதை எழுதினால் நினைத்தது நிறைவேறும். வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.