
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயூராதிரூடம் மகாவாக்ய கூடம்
மனோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மகாவேத பாவம்
மகாதேவ பாவம் பஜே லோக பாலம்!!
மயில் வாகனம் கொண்ட முருகப்பெருமானே. வேதங்கள் கூறும் மறைபொருளே. பக்தர்களின் உள்ளத்தில் குடிகொண்டவனே. பரந்த மனதில் இருப்பவனே. தெய்வங்களில் எல்லாம் மேலானவனே. வேதத்தின் உட்பொருளே. சிவபெருமானின் மகனே. உலகத்தைக் காப்பவனே. உம்மைப் போற்றுகிறேன் என்கிறார் ஆதிசங்கரர்.