
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழை ஒருவனுக்கு ஐந்து மகள்கள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்ய முடியாமல் தவித்த அவனை, 'சம்பாதிக்கப் போ' எனச் சொல்லி வீட்டை விட்டு அனுப்பினாள் அவனது மனைவி.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வந்த அவன், ''ஏன் சுவாமி! உமக்கு ஐந்து மகள்கள் இருந்தால் இப்படி படுத்து உறங்குவீரா?” எனக் கேட்டான்.
அருகில் நின்ற பக்தர் ஒருவர், ''ரங்கநாதரிடம் இப்படி கேட்கலாமா?' என்றார்.
அதற்கு, “ரங்கநாதரின் உறவினனான நான் கேட்பதில் தவறில்லை” என்றான். பக்தரோ வியந்து நிற்க, “ஆம்! அவர் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் கணவர். நானோ மகாலட்சுமியின் சகோதரியை(வறுமை) மணந்த ஏழை'' என்றான்.