
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குலந்தான் எத்தனையும்
பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன்;
நல்லதோரறஞ் செய்துமிலேன்;
நிலந்தோய் நீள்முகில்சேர்
நெறியார்திரு வேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன்;
அடியேனையாட் கொண்டருளே
நிலத்தை தொடும் நீண்ட மேகங்களும், நடமாடும் வழிகள் நிறைந்ததுமான திருவேங்கட மலையில் எழுந்தருளும் பெருமானே. நான் எல்லாக் குலங்களிலும் பிறப்பதும், இறப்பதுமாகவே காலத்தைக் கழித்து இளைத்துப் போனேன். நன்மையைத் தரும் அறச்செயலை செய்யாதவனாக உள்ளேன். இதனால் துன்பம் அடைந்து வருந்தினேன். எனவே நான் கடைத்தேற வேண்டி உன் திருவடிகளே சரணம் என வந்துள்ளேன். சரணடைந்த அடியவனை ஆட்கொண்டு அருள்புரிவாயாக என்கிறார் திருமங்கையாழ்வார்.