ADDED : ஜூன் 21, 2024 02:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவத்தில் இருந்த சிவபெருமான் மீது மலர் அம்பு தொடுத்தான் மன்மதன். இதனால் கோபமுற்ற அவர் மன்மதனை அழித்தார்.
மன்மதனின் மனைவி ரதி காப்பாற்றும்படி சிவனை வேண்டினாள். மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என வரம் அளித்தார். மன்மதனை (காமனை) உயிர்ப்பித்தவர் என்பதால் காமநாதீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. இவருக்கு சேலம் மாவட்டம் ஆறகழூரில் கோயில் உள்ளது. (சேலத்தில் இருந்து ஆத்துார் வழியாக 80 கி.மீ.,) இங்குள்ள அஷ்ட பைரவர் சன்னதி சிறப்பானது.