
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநியில் முருகன் மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் உள்ளார். திருஆவினன்குடியில் குழந்தையாக காட்சி தருகிறார், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடன் வீற்றிருக்கிறார். இல்லறம், துற வறம் ஆகிய இருநெறிகளையும் முருகன் இங்கு காட்டி நின்றாலும் மலைக்கோயில் பழநியாண்டிக்கே சிறப்பு அதிகம். தண்டாயுதம் ஏந்தி கோவணத்துடன் ஞானபண்டித சுவாமியாக எழுந்தருளியுள்ள இவரை தரிசித்தால் அறியாமை அகலும்.

