ADDED : பிப் 16, 2022 10:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அழகு, அறிவு, செல்வ வளம், தர்ம சிந்தனை கொண்டவர்களாக இருப்பர். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் செலவழிப்பர், கவுரவமாக வாழ்க்கை நடத்துபவர்களாக இருப்பர். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியாக விளங்குவர். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கம், வசீகர பேச்சு, விட்டுக் கொடுக்கும் குணத்துடன் இருப்பர். மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை சுக்கிரன். நவக்கிரக மண்டபத்திலுள்ள இவரை வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

