ADDED : ஜன 06, 2013 04:38 PM

பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்ற சர்ச்சை உண்டாக சிவனை நாடினர். அப்போது சிவன் அக்னிமலையாக வளர்ந்து நின்று தன்னுடைய அடியையும், முடியையும் முதலில் காண்பவரே பெரியவர் என அருளினார். பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியையும், திருமால் வராக வடிவெடுத்து அடியையும் தேடிப் புறப்பட்டனர்.
திருமால் காணமுடியாமல் பாதியில் திரும்பி வந்து ஓரிடத்தில் தங்கினார். அந்த இடம் அரிதாரிமங்கலம். இங்கு சிவன் கைலாசநாதராகவும், அம்பிகை பெரிய நாயகியாகவும் அருள் பாலிக்கின்றனர். திருவண்ணாமலையில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது.
சிவனை மணம் புரிய, காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வந்த பார்வதிக்கு தாகம் ஏற்பட்டது. இளைய மகன் முருகனிடம் நீர் கேட்க, அவர் தீர்த்தமலையை நோக்கி அம்பைத் தொடுத்தார். அந்த அம்பு தவத்தில் இருந்த ஏழு ரிஷிகளின் தலையைக் கொய்து விட்டு நீரை பீறிடச் செய்தது. ரிஷிகளின் ரத்தம் கலந்தபடி நீர் செந்நிறமானது. 'சேய்' என்பதற்கு 'குழந்தை' என பொருள். பார்வதியின் சேய் முருகனால் வந்ததால்'சேயாறு' எனப்பட்டது. தற்போது 'செய்யாறு' ஆகி விட்டது.
ரிஷிகளைக் கொன்ற தோஷம் நீங்க முருகன், சேயாற்றின் ஏழு இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே 'சப்த கரைகண்ட ÷க்ஷத்திரங்கள். பார்வதியும் முருகனுக்காக ஏழு இடங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்தாள். அவை சப்த கைலாச ÷க்ஷத்திரங்கள். அரிதாரிமங்கலம் Œப்த கைலாய @ஷத்திரத்தில் ஒன்றாகும். இரண்டிலும் அமைந்தது. திருமால் தங்கிய தலம் என்பதால் இங்கு தரிசிப்பவர்க்கு பணக்கஷ்டம் தீரும். இங்குள்ள பெரியநாயகி அம்மனுக்கு நான்கு ஞாயிறு தீபமேற்றி வழிபட்டால் மணவாழ்வும், சுமங்கலி பாக்கியமும் உண்டாகும் சிதிலமடைந்த இக்கோயிலில் திருப்பணி முடிக்கப்பட்டு ஜன.27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. .
போன்: 98400 53289, 94427 43803
- மகாலட்சுமி சுப்பிரமணியன்