ADDED : நவ 18, 2016 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாராவது தவறு செய்து விட்டால் கோபத்தில் 'மடையா' என திட்டுவது வழக்கம். மடையன் என்பது தவறான வார்த்தையல்ல. கோவில்களில் சுவாமிக்கு நைவேத்யம் தயாரிக்கப்படும் சமையலறை 'மடைப்பள்ளி' எனப்படும். இந்த புனிதமான பணியைச் செய்பவர்கள் 'மடையர்' என்றழைக்கப்பட்டனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் மடைப்பள்ளியில் பணியாற்றிய ஒரு பக்தர், முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். முருகன், இவருக்கே தனது தல வரலாறை எழுதும் பாக்கியத்தை அளித்தார். இதன் பிறகு இந்த பணியாளர் 'வென்றிமாலை கவிராசர்' என அழைக்கப்பட்டார்.

