ADDED : ஜூலை 29, 2016 10:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தின் திரிவேணி என போற்றப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்படும். அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். மக்கள் கூடுதுறை ஆற்றில் நீராடி விட்டு சங்கமேஸ்வரரை வழிபடுவர். தேங்காய், பழம், பூ, காதோலை, கருகமணி படைத்து நதிக்கு பூஜை செய்வர். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் காப்பாக அணிந்து கொள்வர். இதனால் ஆண்டு முழுவதும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகம்.