ADDED : பிப் 06, 2022 03:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயிலில் மூலவருக்கு எதிரில் நின்று வழிபடக் கூடாது. 'சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். சுவாமியின் வலம், இடது புறம் நின்றே வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் அவரது கடைக்கண் பார்வை நம் மீது விழும். இதுவே கருணையும், குளிர்ச்சியும் கொண்டது.
அம்பிகையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கல்வி, நிறைந்த ஆயுள், உடல்நலம், செல்வம், தளராத மனம், தெய்வீக வடிவம், நல்ல நண்பர்கள் என அனைத்து நன்மைகளும் உண்டாகும் என அபிராமிபட்டர் பாடியுள்ளார்.

