ADDED : அக் 07, 2016 09:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் இங்கு மிகப் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்படும். ஒரு காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன், மைசூரு சாமுண்டீஸ்வரியை ஒன்பது நாட்கள் இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம். பத்தாவது நாளில் போருக்கு புறப்பட்டுச் செல்வர். இதன் மூலம் தேவியருளால் வெற்றி வாகை சூடுவர். மைசூருவில் தசரா உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதை 'தஸ்ராத்' என்பர். இதற்கு 'பத்து இரவுகள்' என்று பொருள். இந்தச்சொல்லே திரிந்து 'தசரா' எனப்படுகிறது. மைசூரு அரண்மனை முன்பு தசராவை முன்னிட்டு யானை மீது சாமுண்டீஸ்வரி பவனி வருவாள்.

