sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கணக்கில் வீக்கா? கணக்கு விநாயகரை வணங்குங்க!

/

கணக்கில் வீக்கா? கணக்கு விநாயகரை வணங்குங்க!

கணக்கில் வீக்கா? கணக்கு விநாயகரை வணங்குங்க!

கணக்கில் வீக்கா? கணக்கு விநாயகரை வணங்குங்க!


ADDED : நவ 06, 2012 05:45 PM

Google News

ADDED : நவ 06, 2012 05:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழனால் ஏற்படுத்தப்பட்ட நகரம் கங்கை கொண்ட சோழபுரம். சோழர்காலத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கையும் இவரது ஆட்சியின் கீழேயே இருந்தது. அந்த பகுதிக்கெல்லாம் தலைநகர் இவ்வூர் தான். புகழ் பெற்ற இவ்வூரிலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலின் தென்மேற்கே, 'கணக்கு விநாயகர் கோயில்' உள்ளது. இதையும் ராஜேந்திரசோழனே உருவாக்கினார். தன் அரண்மனை பகுதியில் அமைந்திருந்த இந்த விநாயகரை, தினமும் வணங்கிய பிறகே பணிகளைத் துவக்குவாராம். கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டிய காலத்தின் கோபுரம் கட்டிய செலவை, தன் மந்திரியிடம் கேட்டார் மன்னர். மறுநாள் சொல்வதாக மந்திரி கூறினார். எத்தனையோ தடவை கணக்குப் பார்த்தும் சரியாக வரவில்லை. மறுநாள், மன்னரிடம் தவறாகக் கணக்கு சொன்னால் ஊழல் பிரச்னையாகி விடுமே என பயந்திருந்தார் மந்திரி. அன்று இரவில், மந்திரிக்கு இந்த பிள்ளையாரே வந்து சரியாக சொன்னாராம். இதனால் இவருக்கு 'கணக்கு விநாயகர்' என்று பெயர். இது ஒரு அற்புதமான சிலை. கணக்கு பாடத்தில் 'வீக்' ஆக இருக்கும் மாணவர்கள் இவரை வணங்க வருகிறார்கள்.

-சிவா






      Dinamalar
      Follow us