sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

எல்லாருமே அர்ஜூனர்தான்!

/

எல்லாருமே அர்ஜூனர்தான்!

எல்லாருமே அர்ஜூனர்தான்!

எல்லாருமே அர்ஜூனர்தான்!


ADDED : அக் 29, 2012 11:51 AM

Google News

ADDED : அக் 29, 2012 11:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீங்கள் எல்லாரும் அர்ஜுனர்கள் தான். அவன் மாதிரி மனம் குழம்பி இருப்பவர்கள் தான். இன்றிலிருந்து மனதில் இருக்கும் அசுரசக்திகளை ஜெயிப்பதற்காக தெய்வீகமான விருத்திகளை நன்றாகத் திரட்டிக் கொள்ளவும், பரம எளிமையோடு பரமேஸ்வரனிடம் பக்தி செலுத்தவும் ஆரம்பியுங்கள். வாழ்க்கைப் போராட்டத்தை புத்திசாலித்தனமாக நடத்துங்கள். பகவானையே நினைத்துக் கொண்டு இப்போராட்டத்தை நடத்தினால் அவனிடம் மட்டுமே பற்று இருக்கும்.

ஞானவாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ஜன்மா ஒன்றுக்குத் தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன் தான் தன்னையே பரபிரம்மமாக தெரிந்து கொள்கிற ஞானத்துக்கு முயல முடியும் என்பதால் தான் ''அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'' என்று சொன்னாள் அவ்வை. இதையே தான் ஆச்சாரியாளும் (ஆதிசங்கரர்) விவேகசூடாமணியில் ''ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம்'' என்றார். இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஞானத்தை அடைவதற்குப் பிரயத்தனம் பண்ணவேண்டும். இதற்குப் பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சம் கூடச் சரியில்லை. அப்படிச் சொன்னால் நம்மைப் போல 'அசடு' யாருமில்லை என்று தான் அர்த்தம்.

சொல்கிறார் காஞ்சி பெரியவர்






      Dinamalar
      Follow us