
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடராஜரின் கையிலுள்ள அக்னி ஞானத்தின் குறியீடு. ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ, அவருக்கே கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பதை அவர் ஏந்தியுள்ள தீச்சட்டி உணர்த்துகிறது. இறைவன் செய்யும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில், நெருப்பு அழித்தலைக் குறிக்கும். மனதில் இருக்கும் 'அறியாமை' என்னும் காட்டை நடராஜர் அழிக்கிறார் என்பதை அவர் ஏந்தியுள்ள நெருப்பு காட்டுகிறது. கையில் கற்பூரம் வைத்துக் கொண்டு ஒருவன் ஒன்றைச் சொன்னால், 'சொல்வது சத்தியம்' என்பர். நடராஜரும் நமக்கொரு சத்தியம் செய்து கொடுக்கிறார். 'தன்னை நம்பி வந்தவர்களை காப்பேன்' என்பது தான் அது.

