
ஹிந்து மதத்தில் மட்டுமல்லாமல் சரஸ்வதியை புத்த சமயத்தினரும் வழிபட்டுள்ளனர். அவர்கள் மகா சரஸ்வதி, வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி என்னும் ஐந்து வகையில் சரஸ்வதியை வணங்கியுள்ளனர்.
1. மகா சரஸ்வதி: வெண்மை நிறம் கொண்டவள். இரு கைகளில் வீணை ஏந்தி, மேல் வலது கையில் அபய முத்திரையும், மேல் இடது கையில் வெண் தாமரையும் வைத்திருப்பாள்.
2. வீணா சரஸ்வதி: கல்வியை வழங்குபவளாக தன் இருகரங்களில் வீணையைத் தாங்கி இசைத்தபடி இருப்பாள்.
3. வஜ்ர சாரதா: இடது கையில் புத்தகம் தாங்கியும், வலது கையில் தாமரை மலரை ஏந்தி நிற்பாள்.
4. ஆர்ய சரஸ்வதி: வலது கையில் செந்தாமரையும், இடது கையில் புத்தகமும் ஏந்தியிருப்பாள். இவளை நேபாளத்தில் வழிபட்டுள்ளனர்.
5. வஜ்ர சரஸ்வதி: மூன்று முகம், ஆறு கைகள் கொண்டவளாகத் திகழ்கிறாள். இந்த தேவி கரங்களில் தாமரை, சுவடி, கத்தி, கபாலம், சக்கரம், கலசம் ஏந்தியிருப்பாள்.