
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மருக்கு பிதாமகரான பீஷ்மரால் உபதேசிக்கப்பட்டது விஷ்ணு சகஸ்ரநாமம்.
150 ஸ்லோகம் கொண்ட இதில் மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் (பெயர்கள்) உள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதா என பல சகஸ்ர நாமங்கள் இருந்தாலும் விஷ்ணு சகஸ்ர நாமமே சிறப்பானது.
ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் ஆகியோர் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் தத்துவங்களில் இதற்கு உரை எழுதியுள்ளனர். பாரதப்போர் முடிந்த பின்னர் சகஸ்ரநாமத்தை தர்மருக்கு உபதேசித்தார் பீஷ்மர். அப்போது கிருஷ்ணரும் அதைக் கேட்டு மகிழ்ந்தார்.
பகவானைக் காட்டிலும் அவரது திருநாமத்திற்கு மகிமை அதிகம். விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒரு மண்டலம் (48 நாட்கள்) படித்தால் உடனடி பலன் கிடைக்கும். 24 நாள் அல்லது 12 நாள் படிக்கலாம். இதனால் நோய் நீங்கும். பாவம் தீரும்.