ADDED : மே 13, 2011 12:19 PM
குருபெயர்ச்சி நாளில் சந்திரன் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். புனர்பூசம் குருவிற்குரிய சொந்த நட்சத்திரம். குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திர அமைப்பில் சஞ்சரிப்பதால் கஜகேசரியோகம் உண்டாகிறது. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியமூன்றும் குருவிற்கு உரியவை. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் குரு பெயர்ச்சியால் நன்மைகளைச் சிறப்பாகப் பெறுவர். குருவருளால் தனம், தானிய லாபம் பெருகும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். நல்லவர்களின் நட்பால் எதிர்காலம் ஒளிமயமாகும். அதேபோல, இந்நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு தன் சொந்த வீடான கடகத்தில் இருக்கிறார். இதனால், சந்திரனுக்குரிய ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு சுப ஸ்தானத்தில் இல்லாவிட்டாலும் அனுகூலபலன்களே கிடைக்கப்பெறுவர்.