
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை திருநீர்மலை சாலையில், குன்றத்தூர் அருகில் காத்யாயனி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள அஷ்டலட்சுமி கோபுரம் அருகில் தோரணவாயில் காப்பு கணபதி வீற்றிருக்கிறார். கடன் நிவாரணம் உண்டாகவும், வியாபாரத்தில் லாபம் பெருகவும் இவரை வழிபடலாம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இங்கு விநாயகர் நவராத்திரி விழா நடந்து வருகிறது. கடந்த ஆக.20ல் தொடங்கிய விழா விநாயகர் சதுர்த்தியன்று நிறைவு பெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு வலம்புரிச்சங்கு பூஜை, பால் அபிஷேகம், கடன் தீர் பரிகார யக்ஞம், திரிசதி அர்ச்சனை, பிரசன்ன ஸ்துதி பாராயணம் ஆகிய வழிபாடுகள் நடக்கின்றன. இன்று (ஆக.26) ருணமோசன கணபதி வழிபாடும், நாளை சங்கடஹர கணபதி வழிபாடும், ஆக.28ல் ஸ்வர்ண கணபதி வழிபாடும், ஆக.29ல் விநாயகர் சதுர்த்தி விழாவும் நடக்கின்றன.
-கே.குமார சிவாச்சாரியார்