ADDED : செப் 17, 2012 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அடிப்படையில் சிவபார்வதியை வலம் வந்து வணங்கி மாங்கனியைப் பெற்றவர் விநாயகர். பெற்றோருக்குப் பெருமைசேர்ப்பது போல ஹேரம்பர் (ஐந்து முகம்) கோலத்தில், சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இவரது ஐந்து முகங்கள் சிவனின் ஐந்து முகங்களை ஞாபகப்படுத்துகிறது. வாகனம் சிங்கம் அம்பிகைக்கு உரியதாகும். ஆக, சிவசக்தி இணைந்த வடிவம் விநாயகர் என்பது உறுதியாகிறது. நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில், செம்பால் உருவாக்கப்பட்ட ஹேரம்ப கணபதி இருக்கிறார். இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.

