ADDED : அக் 20, 2017 03:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூரில் முருகன் 'ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், 'குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்து இருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும்,
கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, 'ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். இங்கு தட்சிணாமூர்த்தி, மான், மழுவுடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.